உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிணையில் விடுவிக்கப்பட்ட சஹ்ரான் ஹாசிமின் சகோதரியின் கணவர் உள்ளிட்ட 30 பேர் கைது

Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சஹ்ரான் ஹாசிமின் சகோதரியின் கணவர் உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடியில் வீடொன்றில் ஒன்றுகூடியுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று (01) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சில குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles