லங்கா IOC எரிபொருட்களின் விலைகளிலும் திருத்தம்

Colombo (News 1st) சிபெட்கோ நிறுவனத்தின் விலைத் திருத்தத்திற்கு அமைவாக தமது விலைகளும் திருத்தியமைக்கப்படுவதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், சினோபெக் நிறுவனமும் தமது எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசலின் விலைகள் சிபெட்கோவின் விலைகளுக்கு அமைய குறைக்கப்பட்டுள்ளன.

இம்முறை விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படாத ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 368 ரூபாவிற்கும் ஒட்டோ டீசல் ஒரு லீட்டர் 360 ரூபாவிற்கும் சினோபெக் நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படுகின்றது.

இதனிடையே, சிபெட்கோ எரிபொருள் நிறுவனம் நேற்று(04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டிருந்தது.

அதற்கமைய, ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 458 ரூபாவாகும்.

ஒரு லீட்டர் ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 447 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 257 ரூபாவாக அமைந்துள்ளது.

ஒக்டேன் 92 பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles