Sangathy
NewsWorld Politics

காஸாவில் உதவிப் பொதி விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு..!

காஸா பகுதியில் வான்வழியாக வீசப்பட்ட உதவிப் பொதி தாக்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற பாராசூட் செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்..,

அமெரிக்கா, ஜோர்டான், எகிப்து, பிரான்ஸ் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் சமீப நாட்களில் காஸா பகுதிக்கு விமான உதவிகளை வழங்க முன்வந்துள்ளன.

அமெரிக்காவும் ஜோர்டானிய விமானப்படையும் இணைந்து அண்மையில் காஸா பகுதிக்கு வான் உதவிகளை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தனது விமானம் ஒன்றினால் விபத்து ஏற்பட்டதாக வெளியான தகவல் தவறானது என ஜோர்டான் தெரிவித்துள்ளது.

காஸாவின் 2.3 மில்லியன் மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் பட்டினியால் இறப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த வார இறுதியில் காஸா பகுதிக்கான உதவிகள் கடல் வழியாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

Duke of Edinburgh, HRH Prince Philip, Passed Away at the age of 100

Lincoln

Asalanka wins last over thriller at Pallekele

Lincoln

வத்தேகம வைத்தியசாலைக்கு நோயாளரை பார்க்கச்சென்ற நால்வர் வைத்தியர் மீது தாக்குதல்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy