Sangathy
IndiaNews

825 கோடி ரூபாய் செலவில் சேலா சுரங்கப்பாதை : உலகிலேயே இதுதான் ரொம்ப நீளம்..!

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உலகிலேயே நீண்ட சுரங்கப்பாதையான சேலா சுரங்கப்பாதையை திறந்து வைத்திருக்கிறார் பிரதமர் மோடி.

இந்த சுரங்கப்பாதை கிட்டத்தட்ட 13,000 அடி மேலே இருக்கிறது. இந்த சுரங்கப்பாதை சுமார் 825 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் நீண்ட சுரங்கப்பாதையில் வேறென்ன இருக்கிறது தெரியுமா ?

அருணாச்சல பிரதேச மாநிலத்தின் இட்டாநகரில் நடைபெற்ற ‘விக்சித் பாரத்- விக்சித் வடகிழக்கு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிக நீண்ட இருவழி சுரங்கப்பாதையான சேலா சுரங்கப்பாதையை திறந்து வைத்தார். இந்திய சீன எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சுரங்கப்பாதையானது இரு நாட்டுக்குமான எல்லை கட்டுப்பாடு கோட்டிற்கு அருகில் இருக்கும் தேஜ்பூர் மற்றும் தவாங் பகுதியை இணைக்கிறது.

உலகிலேயே மிகவும் நீண்ட சுரங்கப்பாதை என்கிற வரலாற்றை மட்டுமல்லாது நீண்ட இருவழி சுரங்கப்பாதை என்கிற வரலாற்றையும் சேலா சுரங்கப்பாதை உருவாக்கியுள்ளது. இந்த சேலா சுரங்கப்பாதை பற்றிய சில முக்கியமான தகவல்கள் இதோ..

அருணாச்சல பிரதேச மாநிலத்தின் இட்டாநகரில் நடைபெற்ற ‘விக்சித் பாரத்- விக்சித் வடகிழக்கு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிக நீண்ட இருவழி சுரங்கப்பாதையான சேலா சுரங்கப்பாதையை திறந்து வைத்தார்.

இந்திய சீன எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சுரங்கப்பாதையானது இரு நாட்டுக்குமான எல்லை கட்டுப்பாடு கோட்டிற்கு அருகில் இருக்கும் தேஜ்பூர் மற்றும் தவாங் பகுதியை இணைக்கிறது.

உலகிலேயே மிகவும் நீண்ட சுரங்கப்பாதை என்கிற வரலாற்றை மட்டுமல்லாது நீண்ட இருவழி சுரங்கப்பாதை என்கிற வரலாற்றையும் சேலா சுரங்கப்பாதை உருவாக்கியுள்ளது. இந்த சேலா சுரங்கப்பாதை பற்றிய சில முக்கியமான தகவல்கள் இதோ..

இருவழியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சுரங்கப்பாதையில் ஒரு சுரங்கம் 1,595 மீட்டர் நீளத்திலும், மற்றொரு சுரங்கம் 1,003 மீட்டர் நீளத்திலும் அமைக்கப்பட்டு சாலைகளோடு இணைக்கப்பட்டிருக்கிறது.

சாலை பயணிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, இந்த சுரங்கப்பாதை காற்றோட்டத்துடனும் சக்திவாய்ந்த மின் விளக்குகள், தீயணைப்பு வழிமுறைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. தினசரி பயன்பாட்டில் சுமார் 3,000 கார்கள் 2,000 டிரக்குகள் செல்லும் வகையில் இந்த சுரங்கப்பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொறியியலில் அற்புதம் என கூறப்படும் சேலா சுரங்கப்பாதை அனைத்து வானிலை சமயங்களிலும் பயன்படுத்த முடியும் எனவும் தெரிகிறது. பலிப்பாரா – சரித்துவார் மற்றும் தவாங் சாலைகளில் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படும்போது சவாலான சூழல்களை சமாளிக்கும் வகையிலேயே இதன் இணைப்புகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா மற்றும் சீனாவின் எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சுரங்கப்பாதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகவே அரசு கருதியது. இதற்காக சுமார் 90 லட்ச மணி நேரம் செலவானதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 650 தொழிலாளர்கள் இந்த சுரங்கப்பாதையை காட்டும் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த இரண்டு வழிகளை கொண்டுள்ள சுரங்கப்பாதையில் ஒன்று மக்களின் போக்குவரத்து தேவைகளுக்காகவும் மற்றொன்று அவசரகாலத்தில் பயன்படுத்தவும் எதுவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சுரங்கங்களுக்கான இணைப்பு சாலை சுமார் 1200 மீட்டர் நீளம் கொண்டவையாகும்.

இந்த சேலா சுரங்கப்பாதையை திறந்து வைத்த பிறகு மக்களிடம் பேசினார் பிரதமர் மோடி.

Related posts

அகிலம் போற்றும் யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் இரதோற்சவப் பெருவிழா

Lincoln

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வரவுள்ளார்

Lincoln

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை மூன்று நாட்களுக்குள் வௌியிட எதிர்பார்ப்பு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy