Colombo (News 1st) கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இராஜினாமா செய்துள்ளார்.
புதிய தலைவராக ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதனிடையே, பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவும் கோப் குழு உறுப்புரிமையிலிருந்து விலகுவதாக நேற்று(18) அறிவித்திருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களான S.M.மரிக்கார் மற்றும் சரித்த ஹேரத் ஆகியோரும் பதவி விலகியுள்ளனர்.