Sangathy
Sports

பிராவோவின் சாதனையை சமன் செய்த மோகித் சர்மா..!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று(24) நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 169 ஓட்டங்கள் சேர்த்தது. மும்பை இந்தியன்ஸ் அணியால் 162 ஓட்டங்கள் மட்டுமே அடித்து 12ஆவது முறையாக முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

இப்போட்டியின் கடைசி கட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 33 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதற்கு முன்னதாக வெயின் பிராவோ 33 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தற்போது மோகித் சர்மா பிராவோ உடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை பகிர்ந்தள்ளார்.

அஸ்வின் 26 விக்கெட்டுகளும், சாஹல், சாவ்லா, அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 25 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

Related posts

World Test Championship final excites DK

Lincoln

Pradeeptha, Inuka dazzle

Lincoln

Link Natural and Sky Cricket Club partner to empower Sri Lankan women cricketers

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy