Sangathy
Sports

42-வயதில் இப்படி ஒரு கேட்ச் : அதிர்ந்த சேப்பாக்கம்..!

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் நேற்றைய (மார்ச் 26) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த குஜராத் அணி போட்டி முடிவில் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்களை குவித்தது.

சென்னை சார்பில் துவக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 46 ரன்களை குவித்து நல்ல துவக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த ரஹானே 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த ஷிவம் தூபே அதிரடியாக ஆடி 23 பந்துகளில் 51 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் டேரில் மிட்செல் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த நிலையில், 207 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

சேசிங்கில் குஜராத் அணி 55 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் மிட்செல் பந்து வீச்சை எதிர்கொண்டார் விஜய் சங்கர். இந்த பந்து அவரது பேட்-இல் டிப் ஆகி விக்கெட் கீப்பருக்கு கேட்ச் ஆக மாறியது. கீப்பிங்கில் நின்றிந்த எம்.எஸ். டோனி தன்னை விட பந்து சற்று விலகியே சென்ற போதிலும், அபாரமாக பாய்ந்து கேட்ச் பிடித்தார்.

இந்த சீசன் துவங்கும் முன்பிருந்தே, எம்.எஸ். டோனி இந்த சீசனுடன் ஓய்வு பெறுவாரோ என்ற பேச்சும், அவரது உடல்நிலை குறித்த சந்தேகமும் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக இருந்தது வந்தது. இவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில், எம்.எஸ். டோனியின் நேற்றைய கேட்ச் அமைந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Related posts

Wasim Akram reveals he was addicted to cocaine after playing career ended

Lincoln

Naomi Osaka announces pregnancy

Lincoln

டோனி டோனி என கூச்சலிட்ட ரசிகர்கள்.. நிறைய நாள் அழுதேன்.. பண்ட் உருக்கம்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy