Sangathy
Technology

வாட்ஸ்அப் மூலம் வெளிநாடுகளுக்கும் பணம் அனுப்பலாம் : விரைவில் புது வசதி..!

வாட்ஸ்அப் நிறுவனம் சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட்களை மேற்கொள்ளும் வசதியை இந்திய பயனர்களுக்கு வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக வெளியான ஸ்கிரீன்ஷாட்களில் புது வசதி யு.பி.ஐ. செட்டிங்ஸ் (UPI Settings) பகுதியில் இன்டர்நேஷனல் பேமண்ட்ஸ் (International Payments) ஆப்ஷனில் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.

இதனை தேர்வு செய்யும் போது, சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்து, எவ்வளவு காலம் இது செயல்படுத்த வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். யு.பி.ஐ. பேமண்ட் வசதியை வழங்கும் போன்பே (PhonePe) மற்றும் ஜிபே (GPay) உள்ளிட்டவைகளில் இந்த வசதி ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது.

அந்த வரிசையில் தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப்-இல் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் யு.பி.ஐ. பேமண்ட் சேவை கடந்த 2020 நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 140-க்கும் அதிக வங்கிகளை பயன்படுத்த முடியும்.

சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட் மேற்கொள்ளும் வசதி தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போதைக்கு இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இதர விவரங்கள் மற்றும் வெளியீட்டு அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

Related posts

Nano technology are being used in Intel

Lincoln

மே 7 ஆம் திகதி புது சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்..!

tharshi

ப்ளூடூத் காலிங், ஸ்போர்ட்ஸ் மோட்கள் : குறைந்த விலையில் அறிமுகமான நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy