Sangathy
CricketSports

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய சென்னை..!

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற சென்னை அணியின் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிலிப் சால்ட், துஷார் தேஷ்பாண்டே வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்த சீசனில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கொல்கத்தா அணியை சென்னை பந்துவீச்சாளர்கள் முழுவதுமாக கட்டுப்படுத்தினர்.

கொல்கத்தா அணி வீரர்கள் சுனில் நரைன் 27 ஓட்டங்களிலும், ரகுவன்ஷி 24 ஓட்டங்களிலும், வெங்கடேஷ் ஐயர் 3 ஓட்டங்களிலும் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 9 ஓட்டங்களிலும், ரசல் 10 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் கொல்கத்தா அணித் தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை கௌரமான நிலைக்கு எட்ட உதவினார்.

பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 34 ஓட்டங்களை எடுத்தார். சென்னை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், முஸ்டாபிசுர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 138 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் ரச்சின் ரவீந்திரா மற்றும் அணித் தலைவர் கெய்வாட் ஆகியோ களமிறங்கினர். இந்த ஜோடியில் ரவீந்திரா 15 (8) ஓட்டங்களில் பிடிகொடுத்து வெளியேறினார். அடுத்ததாக கெய்க்வாட்டுடன், டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட் 45 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். மறுமுனையில் நிதானமாக ஓட்டங்களை சேர்த்துக்கொண்டிருந்த டேரில் மிட்செல் 25 (19) ஓட்டங்களில் சுனில் நரைன் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.

அடுத்ததாக கெய்க்வாட்டுடன், ஷிவம் துபே ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்த ஷிவம் துபே 28 (18) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் கெய்க்வாட் 58 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்களும், தோனி 1 (3) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் சென்னை அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக வைபவ் அரோரா 2 விக்கெட்டுகளும், சுனில் நரைன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதுடன், ஐ.பி.எல். தொடரின் தனது 3-வது வெற்றியை பதிவு செய்தது.

Related posts

Exciting finish in Galle

Lincoln

Githmi, Chanula win age category titles

Lincoln

Young shuttler Ranithma triumphs at 47th National Sports Festival Games

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy