Friday, November 1, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
Homeபப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

பப்புவா நியூ கினியாவின் வடக்கு பகுதியில் இன்று காலை 6.56 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றது.

இந்நிலநடுக்கம் நியூ பிரிட்டன் தீவின் கிம்பே பகுதியில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவில், 64 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றது. எனினும், இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என அமெரிக்க நிலநடுக்க அறிவியலாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த மாதம் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் 5 பேர் வரை உயிரிழந்தனர். ரிக்டரில் 6.9 அளவிலான நிலநடுக்கத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடியிருப்புகள் மற்றும் வீடுகளை இழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments