அஜித்தின் பிறந்தநாள் : ஷாலினி கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்..!

அஜித் இன்று தனது 53 பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு ஷாலினி அஜித்திற்கு காஸ்டலியான பரிசு ஒன்றிய கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகின்றார் அஜித்.60 படங்களுக்கு மேல் நடித்து வரும் அஜித்திற்கு கோடானகோடி ரசிகர்கள் இருக்கின்றனர். என்னதான் அவர் ரசிகர் மன்றம் வேண்டாம்,எந்த பட்டமும் வேண்டாம் என சொன்னாலும் ரசிகர்கள் அவரை கொண்டாட தவறியதே இல்லை. நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு அவர் மீது கொண்ட அன்பும் மரியாதையும் அதிகரித்துக்கொண்டே தான் வருகின்றது.

அதன் காரணமாகத்தான் அஜித்தை வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். இந்நிலையில் அஜித் இன்று தனது 53 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். அவருக்கு ரசிகர்களும் திரைபிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அஜித்தின் பிறந்தநாளை சிறப்பாக்க அவர் நடித்து வரும் படங்களின் அப்டேட் வெளியாகவுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அஜித்தின் நடிப்பில் வெளியாகி மாஸ் வெற்றியை பெற்ற தீனா, பில்லா ஆகிய படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு ரசிகர்கள் அஜித்தின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். ஆனால் அஜித் வழக்கம் போல தன் பிறந்தநாளை தன் குடும்பத்துடன் கொண்டாடி வருகின்றார்.

அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் மனைவி ஷாலினி அவருக்கு காஸ்டிலியான பரிசு ஒன்றை அளித்துள்ளாராம். அஜித்திற்கு பைக் மற்றும் கார் மீது அதீத ஆர்வம் இருப்பது உலகம் அறிந்த விஷயம் தான். அந்த வகையில் அஜித்திற்கு ஷாலினி விலையுர்ந்த டுகாட்டி பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.

அதன் விலை மட்டும் பல லட்சம் இருக்குமாம். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் அறிவிப்பும், குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்த்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles