போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த இருவர் கைது..!

நாட்டில் பாரிய போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் ஷிரான் பாஷிக்கின் பிரதான சீடரும், டுபாய்க்கு தப்பிச் சென்று சுமார் பதினைந்து கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கையிருப்பை மறைத்துவைத்த பெண்ணொருவரும் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் போது 15 இலட்சம் ரூபா பணமும் ஒரு காரும் மீட்கப்பட்டுள்ளன.

பன்னிபிட்டிய ருக்மல்கம விஜய புர பிரதேசத்தில் தற்காலிகமாக வசிக்கும் ஆண் (51) மற்றும் பெண் (45) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் வலையமைப்புகளை ஒடுக்குவதற்கும், கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை தடுப்பதற்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த போதைப்பொருள் கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles