தியத்தலாவை கார் பந்தய விபத்து : மேலும் ஒருவர் உயிரிழப்பு..!

தியத்தலாவை பொக்ஸ்ஹில் கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவி நேற்று (15) இரவு உயிரிழந்தார்.

அவர் பதுளை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தியத்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்எதண்ட பிரதேசத்தில் வசித்து வந்த 16 வயதான சிறுமியின் சடலம் தற்போது பதுளை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 08 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles