சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா. கங்குவா படத்தில் நடித்துள்ள சூர்யா அடுத்ததாக தனது 44 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் சூர்யா 44 படம் பீரியாடிக் கேங்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், சூர்யா 44 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles