ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு..!

ஸ்லோவாக்கியா பிரதமர் றொபேர்ட் பிக்கோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹன்ட்லோவா நகரத்திலுள்ள கலாசார சமூக நிலையத்தில் இடம்பெற்ற அரசாங்க சந்திப்பொன்றின் போது மக்களை சந்தித்த வேளையிலேயே அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சில துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்கப்பட்ட பின்னர் பிரதமர் பிக்கோவின் பாதுகாப்பு படையணியானது அருகிலுள்ள காரொன்றுக்குள் அவரைச் செலுத்தியுள்ளது.

பிரதமர் பிக்கோ வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன், அவரது தாக்குதலாளியெனக் கூறப்படுபவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அருகிலுள்ள வைத்தியசாலைக்கு ஹெலிகொப்டரில் கொண்டு செல்லப்பட்ட பிரதமர் பிக்கோ, பின்னர் ஹன்ட்லோவாவின் கிழக்கிலுள்ள பன்ஸ்கா பைஸ்ட்டிரிக்காவிலுள்ள இன்னொரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles