கணவரின் ஆனிவர்சரி கிஃப்ட்டில் லாட்டரி வாங்கிய மனைவிக்கு ரூ. 8.22 கோடி பரிசு..!

பஞ்சாபை பூர்விகமாக கொண்டவர் பயல் தனது கணவர் கொடுத்த பரிசு தொகையின் மூலம் கோடீஸ்வரியாகி உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் திருமண நாளுக்கு பயலின் கணவர் ஹர்னீக் சிங் தனது மனைவிக்கு பரிசுத் தொகை வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், கணவர் கொடுக்கும் பரிசுத் தொகையில் லாட்டரி வாங்குவதை பயல் வழக்கமாக வைத்துள்ளார். ஒவ்வொரு முறையும் தான் வாங்கும் லாட்டரியில் “3” என்ற எண் அதிகம் இருப்பதை பயல் உறுதிப்படுத்தி வந்துள்ளார். தனது ராசி எண் என்ற காரணத்தால் அவர் லாட்டரியை இப்படி தேர்வு செய்து வந்துள்ளார்.

பயலின் 16 ஆவது திருமண நாளை ஒட்டி, அவரது கணவர் ஹர்னீக் சிங் பரிசுத் தொகை கொடுத்துள்ளார். அந்த பணத்தில் பயல் துபாய் டியுட்டி ஃபிரீ டிரா (DDF) லாட்டரி வாங்கியுள்ளார். மே 3 ஆம் தேதி இவர் வாங்கிய லாட்டரியில், பயலுக்கு 1 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 8 கோடியே 22 லட்சம்) பரிசு தொகை கிடைத்துள்ளது.

கடந்த 12 ஆண்டுகளாக தான் DDF லாட்டரி வாங்கி வருவதாகவும், ஒவ்வொரு முறையும் தனது கணவர் மற்றும் குழந்தைகள் பெயரில் மாற்றி மாற்றி லாட்டரி வாங்குவதாக பயல் தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles