ஜூன் 9ம் இல் பிரேம்ஜிக்கும், அவரின் காதலிக்கும் திருமணம் : வெங்கட் பிரபு அறிவிப்பு..!

ஜூன் 9ம் திகதி பிரேம்ஜி அமரனுக்கும், அவர் காதலிக்கும் பெண்ணுக்கும் குடும்பத்தார் முன்பு திருமணம் நடக்கவிருப்பதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். மேலும் கோட் பட அப்டேட் விரைவில் வரும் என உறுதி அளித்திருக்கிறார்.

நடிகரும், பாடகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனுக்கும், இந்து என்பவருக்கும் ஜூன் 9ம் திகதி திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் என ஒரு அழைப்பிதழ் அண்மையில் சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில் அது உண்மை தான் என தெரிவித்துள்ளார் பிரேம்ஜியின் அண்ணனான இயக்குநர் வெங்கட் பிரபு.

பிரேம்ஜியின் திருமணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும், அளவில்லாத அன்பையும் வழங்கிய ரசிகர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்.

இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிகையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார். எப்படி கல்யாணப் பத்திரிகை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவை சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன். எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம்.

திருமண அறிவிப்பின்போது கூட கோட் பட அப்டேட்டை மறக்காமல் குறிப்பிட்ட வெங்கட் பிரபுவின் அந்த பாசம் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles