உலகம் முழுவதும் சமீப காலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு துறைகளிலும் தங்களது வித்தியாசமான திறமைகளை செய்து கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அதிலும், வலைதளங்களின் தாக்கம் அதிகரித்து விட்ட இன்றைய சூழலில் சிறு குழந்தைகள் முதல் பெண்கள், முதியோர்கள் என பலதரப்பட்டவர்களும் தங்கள் திறமைகளை வீடியோவாக பதிவு செய்து வெளியிடுவதன் மூலம் பிரபலமாவது மட்டுமின்றி அரிய சாதனைகளையும் படைத்து விடுகின்றனர்.
அந்த வகையில், அமெரிக்காவை சேர்ந்த சேஸ் பிராட்ஷா என்ற வாலிபர் ஒரு நிமிடத்தில் 300 கிராம் காரமான மிளகாய் சாஸை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவர் 60 விநாடிகளில் 332.70 கிராம் சூடான சாஸை சாப்பிடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதில், சேஸ் பிராட்ஷா காரமான மிளகாய் சாஸை கஷ்டப்பட்டு சாப்பிடும் காட்சிகள் உள்ளது. என்றாலும் சவாலில் வெற்றி பெறவும், குறிப்பிட்ட கால கெடுவுக்குள் அதனை சாப்பிட்டு முடிக்கவும் அவர் வேகமாக சாப்பிடும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.