தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் அபு ரோசிக். 3 அடி உயரம் கொண்ட இவர் தடைகளை தகர்த்து தனது திறமையின் மூலம் பாடகராகவும் திகழ்கிறார். சமூக வலைதளங்களிலும் பிரபலமான இவர் இந்தியில் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
இவருக்கும் தஜிகிஸ்தான் பாடகி அமீராவுக்கும் திருமணம் முடிவாகி கடந்த ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது வருங்கால மனைவிக்கு மோதிரம் அணிவித்த புகைப்படத்தை அபு சமூக வலைதளங்களில் வெளியிட்டதோடு, ஜூலை 7-ஆம் திகதி திருமணம் நடைபெற இருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் திருமணத்தை தள்ளிவைத்திருப்பதாக கூறி உள்ளார். துபாயில் ஜூலை 6-ஆம் திகதி பாக்ஸிங் பைட் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்க இருப்பதால் தனது திருமணத்தை தள்ளி வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.