Tuesday, January 14, 2025
Homeபிரசவத்துக்கு போறேன்.. : ஒரு மாதத்துக்கு dinner-ஐ செய்து குவித்த பாசக்கார மனைவி..!

பிரசவத்துக்கு போறேன்.. : ஒரு மாதத்துக்கு dinner-ஐ செய்து குவித்த பாசக்கார மனைவி..!

நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக தனது தாய் வீட்டுக்கு செல்வதால் கணவருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான இரவு உணவை தயாரித்ததாக எக்ஸ் தளத்தில் செய்த பதிவு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜப்பானை சேர்ந்த 9 மாத கர்ப்பிணி ஒருவர் கடந்த 21-ஆம் திகதி எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு செய்திருந்தார். அதில், பிரசவத்திற்காக நான் பெற்றோர் வீட்டிற்கு செல்ல உள்ளேன். நான் இல்லாத நேரத்தில் எனது கணவர் சரியாக சாப்பிட மாட்டார் என்பதால் அவருக்கு ஒரு மாதத்துக்கு தேவையான இரவு உணவை சமைத்து வைத்துள்ளேன் என கூறியிருந்தார்.

அவரது இந்த பதிவு வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து பயனர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை பதிவிட்டனர்.

திருமணத்திற்கு முன்பு உங்களது கணவர் எப்படி சாப்பிட்டார்? என ஒரு பயனரும், இந்த பெண் தனது கணவரின் பணிப்பெண்ணாக நடிக்கிறார் என ஒரு பயனரும் பதிவிட்டனர். சில பயனர்கள் உங்கள் கணவர் வீட்டில் எதுவும் செய்வதில்லையா? என கேள்வி எழுப்பி இருந்தனர். அதே நேரம் சில பயனர்கள் அந்த பெண்ணின் செயலை பாராட்டி பதிவிட்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments