Monday, January 13, 2025
Homeதந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழப்பு..!

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழப்பு..!

மன்னார், முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழந்த சம்பவம் நேற்று (13) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விவசாயியான தந்தை ஒருவர் தனது வயலில் உழவு இயந்திரத்தின் ஊடாக உழுது கொண்டிருந்தார்.

இதன் போது உழவு இயந்திரத்தின் மட்கார்ட் பகுதியில் அமர்ந்து கொண்டிருந்த அவரது 8 வயதுடைய மகள் திடீரென கீழே விழுந்த நிலையில் உழவு இயந்திரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments