Sunday, January 12, 2025
Homeகின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக உயரமான சைக்கிள்..!

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக உயரமான சைக்கிள்..!

பிரான்சை சேர்ந்த நிக்கோலஸ் பாரியோஸ் மற்றும் டேவிட் பெய்ரூ என்ற 2 வாலிபர்கள் உலகின் மிக உயரமான சைக்கிளை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

‘ஸ்டார்பைக்’ என்ற புனைப்பெயர் கொண்ட அவர்களது சைக்கிள் 7.77 மீட்டர் (25 அடி, 5 அங்குலம்) உயரம் கொண்டது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், பாரியோஸ், டேவிட் ஆகிய இருவரும் ஒரு சாலையில் தங்களது சைக்கிளை நவீன எந்திரங்கள் உதவியுடன் உயரமான சைக்கிளாக மாற்றும் காட்சிகள் உள்ளது.

பின்னர் அந்த சைக்கிளின் மீது ஏறி சிறிது தூரம் ஓட்டி செல்லும் காட்சிகளும், அதனை அங்கு இருப்பவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டும் காட்சிகளும் உள்ளது. இந்த சைக்கிள் அலாய் மற்றும் எக்கு மூலம் உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் இதனை உருவாக்கி உள்ளனர். 5 வருடங்களுக்கு முன்பு ஒரு மதுபான விடுதியில் மது அருந்தியபோது பாரியோஸ், டேவிட் ஆகியோர் இந்த சைக்கிள் உருவாக்கம் தொடர்பாக யோசனை தோன்றியதாகவும், அதன்படி சுமார் 3 மாதங்களாக இதற்கான பொருட்களை வாங்கி வடிவமைத்ததாகவும் கூறுகிறார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments