பிரேம்ஜி அமரனுக்கு திருமணமானதில் இருந்து சிலர் ஒரே கவலையாக உள்ளனர். சமூக வலைதளங்கள் பக்கம் போனாலே அவர்களின் சோக கீதமாக இருக்கிறது. யார் அவர்கள், ஏன் கவலையில் இருக்கிறார்கள் என தெரிந்து கொள்ளுங்கள்.
பாடகரும், நடிகருமான பிரேம்ஜி அமரனுக்கும், இந்துவுக்கும் ஜூன் 9ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடந்தது. அதில் பெரியப்பா இளையராஜா கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் மறுநாள் அதாவது ஜூன் 10ம் தேதி நடந்த நடிகர் சார்லியின் இளைய மகன் அஜய் தங்கசாமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வாதம் செய்தார் இளையராஜா.
அதை பார்த்தவர்களோ சொந்த தம்பி மகன் திருமணத்திற்கு ஏன் போகவில்லை என கேள்வி எழுப்பினார்கள். மேலும் இளையராஜாவுக்கும், கங்கை அமரனுக்கும் இடையே பிரச்சனை என பேசத் துவங்கினார்கள். இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு தன் காதல் மனைவியான இந்துவை அழைத்துக் கொண்டு பெரியப்பாவை சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார் பிரேம்ஜி அமரன்.
அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை நிரூபிப்பது போன்று உள்ளது அந்த புகைப்படம். இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்ற மாதிரியும் ஆகிவிட்டது, ஊர் பேச்சுக்கு முற்றுப்புள்ளியும் வைத்தாகிவிட்டது. ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டார் பிரேம்ஜி.
திருமணத்திற்கு முன்பும் கூட இந்துவுடன் சென்று இளையராஜாவிடம் ஆசி பெற்றாராம். பிரேம்ஜியையும், இந்துவையும் ஆசிர்வாதம் செய்து பரிசும் கொடுத்திருக்கிறார் இளையராஜா.
பிரேம்ஜிக்கு திருமணமானதில் இருந்து சிங்கிள்ஸ் எல்லாம் ஒரே சோக கீதம் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். மொரட்டு சிங்கிள்ஸ் சங்கத்தின் தலைவர் போன்று இருந்து வந்தார் பிரேம்ஜி. இந்நிலையில் அவர் பாட்டுக்கு இந்துவை காதலித்து திருமணம் செய்து கொண்டதை சிங்கிள்ஸுகளால் ஏற்க முடியவில்லை.
இனி உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவோம் பிரேம்ஜி என்கிறார்கள் சிங்கிள்ஸ். ஆனால் 90ஸ் கிட்ஸுகள் பலர் சந்தோஷமாக இருக்கிறார்கள். பிரேம்ஜியை பார்க்கும்போது எங்களுக்கும் நிச்சயம் திருமணம் நடக்கும் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது. 70ஸ் கிட்டான பிரேம்ஜிக்கே இப்போழுது தான் திருமணம் நடந்திருக்கிறது. அப்படி என்றால் எங்களுக்கு இன்னும் பல ஆண்டுகள் இருக்கிறது என்கிறார்கள் 90ஸ் கிட்ஸ்.