Sunday, January 12, 2025
Homeபாபர் அசாம் "Fake கிங்" : கிழித்தெடுத்த முன்னாள் பாக். வீரர்..!

பாபர் அசாம் “Fake கிங்” : கிழித்தெடுத்த முன்னாள் பாக். வீரர்..!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அகமது ஷேசாத். நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி வருவதற்கு அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மீது தொடர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில், பாகிஸ்தான் நிகழ்ச்சி ஒன்றில் ஷேசாத் மற்றும் பாபர் என இருவரின் டி20 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள் கொண்டு ஒப்பீடு செய்யப்பட்டது. இதை வைத்து பார்க்கும் போது பாபர் கிங் இல்லை அவர் போலி கிங் என்று தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், “புள்ளி விவரங்களை பார்க்கும் போது, நானே சிறப்பாக செயல்பட்டு இருப்பேன் என்று தோன்றுகிறது. உனது புள்ளி விவரங்கள் என்னைவிட மோசமாகவே இருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடர்களில் 205 பந்துகளை எதிர்கொண்டு, நீ ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை.”

“உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்பை நீ அழித்துவிட்டாய். குழுவில் உள்ள உனது நண்பர்களுக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. 22 வயது வீரரான சயிம் ஆயுப் வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டியது உனது கடமை, ஆனால் இளம் வயதிலேயே அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது. வெறும் 25 போட்டிகளில் ஆயுப்-ஐ மக்கள் விமர்சிக்கின்றனர்,” என தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments