Sunday, January 12, 2025
Homeஅடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிப்பு..!

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிப்பு..!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடா வஸ்கடுவ கடற்கரையில் கரையொதுங்கி ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119க்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (13) காலை சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 05 அடி 02 அங்குல உயரம் கொண்ட மெலிந்த நபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தலைமுடி சுமார் 04 அங்குலத்திற்கு வளர்ந்துள்ளதாகவும், பழுப்பு நிற சட்டை (T-shirt) அணிந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments