வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘கோட்’ படம் உருவாகி கொண்டிருக்கிறது. தற்போது இப்படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ‘கோட்’ படத்தில் விஜய்யின் ஜோடியாக நடிக்க இருப்பவர் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
‘கோட்’ படத்தில் முழுக்க விஜய்யுடன் வரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார் நடிகை சினேகா.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோட்’ படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடந்து வரும் நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் வெறித்தனமான காத்திருப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் ‘கோட்’ படம் குறித்து சினேகா பகிர்ந்துள்ள தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை வைத்து ‘கோட்’ படத்தினை இயக்கி கொண்டிருக்கிறார் வெங்கட் பிரபு. முதல் முறையாக இப்படத்தின் வாயிலாக விஜய்யை இயக்கவுள்ளார். ஏற்கனவே ஏகேவை வைத்து ‘மங்காத்தா’ என்ற படத்தினை இயக்கி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த வெங்கட் பிரபு, விஜய்யை வைத்து என்ன மாதிரியான ஜானரில் படம் இயக்குகிறார் என்பதை அறிய கோலிவுட் வட்டாரமே மிகப்பெரிய காத்திருப்பில் இருக்கின்றனர்.
இந்நிலையில் ‘கோட்’ படம் குறித்து நடிகை சினேகா பகிர்ந்துள்ள தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதன்படி, இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதாக சினேகா கூறியுள்ளார். அத்துடன் படம் முழுக்க விஜய்யுடன் வருவேன் என்றும் இன்னும் ஒரு நாள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் நிச்சயமாக ‘கோட்’ படம் ரசிகர்களை கொண்டாட வைக்கும் எனவும் கூறியுள்ளார் சினேகா.
கடந்த 2003 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் ‘வசீகரா’. தளபதிக்கு ஜோடியாக சினேகா நடித்த இப்படம் காமெடி என்டர்டெயின்மென்ட்டாக ரிலீசாக அமோகமான வரவேற்பினை பெற்றது. அத்துடன் வசீகராவில் விஜய், சினேகா இடையிலான கெமிஸ்ட்ரி இப்போ வரை பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சுமார் 20 வருடங்களுக்கு பின்பாக ‘கோட்’ படத்தின் வாயிலாக விஜய்க்கு சினேகா ஜோடியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
‘கோட்’ படத்தினை தொடர்ந்து ‘தளபதி 68’ ல் நடிக்கவுள்ளார் விஜய். அண்மையில் தனது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கியவர் தீவிர அரசியலில் ஈடுபட போவதால் சினிமாவை விட்டு விலகவுள்ளார். இதனால் ‘தளபதி 68’ விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தினை எச். வினோத் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.