கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட மயக்க மருந்துகளை இன்று (15) விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதுவரை உரிய மருந்துகளை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்து சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியதாக மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.
தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அறைகளில் மயக்க மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சத்திரசிகிச்சைகளை இரத்து செய்ய நேரிட்டதாக தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.