Friday, January 10, 2025
Homeதலையில் தேங்காய் விழுந்ததில் 11 மாத குழந்தை உயிரிழப்பு..!

தலையில் தேங்காய் விழுந்ததில் 11 மாத குழந்தை உயிரிழப்பு..!

கலஹா, தெல்தோட்டை பிரதேசத்தில் தலையில் தேங்காய் விழுந்ததில் 11 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.

கலஹா தெல்தோட்டை நாரன்ஹின்ன தோட்டத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் கியாங்ஷினி என்ற சிறுமியே இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

தந்தை குழந்தையை பக்கத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, ​​வீட்டின் முன்புறம் முப்பது அடி தூரத்தில் இருந்த தென்னை மரத்தில் இருந்து தேங்காய் ஒன்று குழந்தையின் தலையில் விழுந்தது.

பின்னர் குழந்தையை முச்சக்கர வண்டியில் தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த வைத்தியசாலையில் இருந்து குழந்தையின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இவர்கள் வசிக்கும் வரிசை வீடுகளுக்கு அருகாமையில் உள்ள தென்னை மரங்கள் பழுத்த நிலையில், பாதுகாப்பற்ற முறையில் தரையில் விழுந்து கிடப்பதை விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வீடுகளில் மேலும் பல சிறு பிள்ளைகள் மற்றும் பலர் இருந்த போதும் இங்குள்ள அபாயம் தொடர்பில் அவர்கள் அதிக கவனம் செலுத்தவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments