Thursday, January 9, 2025
Homeமனைவியுடன் நடனமாடிய இனைஞனை வெட்டிக் கொன்ற கணவன்..!

மனைவியுடன் நடனமாடிய இனைஞனை வெட்டிக் கொன்ற கணவன்..!

ஆடை நிறுவனத்தில் பணிபுரியும் யுவதியொருவர் அதே நிறுவனத்தில் உள்ள மற்றுமொரு இளைஞனுடன் நடனமாடிய சம்பவத்தில் ஈடுபட்ட யுவதியின் கணவனால் தாக்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர் தொடாங்கொட ஜன் உதான கிராமத்தைச் சேர்ந்த மெனுர நிம்தர வணிகசேகர என்ற 20 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இசை கச்சேரியில் மனைவியுடன் நடனமாடியதாக கூறி குறித்த இளைஞனுக்கும், யுவதியின் கணவனான கொலையாளிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் குறித்த இளைஞனை கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்த இளைஞனுடன் நடனமாடிய யுவதி கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கமகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இசை கச்சேரியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments