விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் the greatest of all time என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கின்றன. கடந்தாண்டு மே மாதம் திடீரென வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இது அனைவர்க்கும் சர்ப்ரைஸான விஷயமாகவே இருந்தது. ஏனென்றால் விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. யாருமே எதிர்பார்க்காத கூட்டணியாக விஜய் மற்றும் வெங்கட் பிரபு இணைந்தது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து. அதுமட்டுமல்லாமல் கடந்த பல ஆண்டுகளாகவே வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என விஜய் ரசிகர்கள் ஆசைப்பட்டு வந்தனர்.
அவர்களின் ஆசை GOAT படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் பொதுவாகவே வெங்கட் பிரபுவின் படங்கள் வித்யாசமாக இருக்கும். சென்னை 28, மங்காத்தா, மாநாடு போன்ற படங்கள் வித்யாசமாகவும் அதே சமயத்தில் கமர்ஷியலாகவும் இருக்கும். எனவே விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் GOAT திரைப்படமும் வித்யாசமான ஒரு படமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கு ஏற்றாற்போல இப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் என அனைத்தும் வித்யாசமாக இருக்கின்றது.குறிப்பாக இப்படத்தின் ஸ்டார் காஸ்ட் தான் படத்தின் ஹைலைட்டான விஷயமாக பார்க்கப்படுகின்றது. விஜய்யுடன் இப்படத்தில் இணைந்து பிரஷாந்த், பிரபுதேவா ஆகியோர் நடித்துள்ளனர். 90s கிட்ஸ்க்கு மிகவும் பிடித்த ஹீரோக்களான விஜய், பிரபுதேவா, பிரஷாந்த் ஆகியோர் ஒரே படத்தில் இணைந்து நடித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூடியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் 80 களில் கொடிகட்டி பரந்த வெள்ளிவிழா நாயகனான மோகன் இப்படத்தில் மிக முக்கியமான ஒரு ரோலில் நடிக்கின்றார். விஜய்யின் GOAT படத்தின் மூலம் மோகன் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார். இப்படத்தில் அவர் விஜய்க்கு வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றியதை பற்றி மோகன் பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவர் கூறியதாவது,
விஜய் மிகவும் அமைதியான ஒரு மனிதர். அவரின் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டாலும் செட்டில் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டு ஷூட்டிங்கை பார்த்துக்கொண்டு இருப்பார்.
புத்தகம் படிப்பது, போன் பேசுவது என எதுவுமே இல்லாமல் அமைதியாக பார்த்துக்கொண்டே இருப்பார். அவரிடம் நான் நிறைய விஷயங்களை பற்றி பேசியிருக்கிறேன். ஆனால் அரசியல் பற்றி மட்டும் பேசியது கிடையாது. ஏனென்றால் அது என் வேலை இல்லை. சினிமா பற்றி பல விஷயங்களை பேசியுள்ளேன் என்றார் மோகன். இவ்வாறு இவர் பேசிய விஷயங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.