Wednesday, December 25, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
Homeராஜ வசூலில் 'மகாராஜா' திரைப்படம்..!

ராஜ வசூலில் ‘மகாராஜா’ திரைப்படம்..!

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.

இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை பார்ப்பதற்கு நாளுக்கு நாள் மக்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். நிறைய திரையரங்குகளில் காட்சியின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர்.

ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். படம் வெளியாகி 3 நாட்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ.32.6 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், இந்தாண்டில் வெளியான தமிழ் திரைப்படங்களில் முதல் 3 நாட்களில் மகாராஜா திரைப்படமே அதிக வசூலைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments