Wednesday, September 25, 2024
Homeஇமயமலை மீது வண்ணத் திரளாக வெட்டிய ராட்சத மின்னல்கள்..!

இமயமலை மீது வண்ணத் திரளாக வெட்டிய ராட்சத மின்னல்கள்..!

அமேரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விண்வெளி மையம் பிரபஞ்சத்தைப் பற்றிய புதுப்புது உண்மைகளை தனது அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் செய்யும் ஆராய்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்தியவாறு இருக்கிறது.

அந்த வகையில் சீனா, பூட்டான் நாடுகளை ஒட்டிய இமயமலைப் பகுதியின்மீது சிவப்பு மற்றும் ரோஸ் வண்ணக்களஞ்சியங்களாக இரவு நேரத்தில் விண்ணில் இருந்து மின்னலாக பாய்ந்த ராட்சத ஒளித்திரள்களை [GIGANTIC JETS] படம்பிடித்து நாசா வெளியிட்டுள்ளது. அரிதினும் அரிதாக ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்த இந்த நிகழவைப் படப்பிடித்துள்ள நாசா, இதை வாரத்தின் சிறந்த வானியல் புகைப்படமாக குறிப்பிட்டு சிலாகித்துள்ளது.

இதற்குமுன் இல்லாதவகையில் 21 ஆம் நூற்றாண்டில் மட்டுமே நடக்கும் இந்த நிகழ்வானது, இடியுடன் மின்னல் அடிக்கும்போது பூமியின் அயோனோஸ்பியர் வளிமண்டல அடுக்குகளில் ஏற்படும் சூரிய கதிர்வீச்சுகளாலும், காஸ்மிக் கதிர்வீசுகளாலும் இந்த வண்ணக்குழப்புகள் ஏற்பட்டு வானில் ஒளிதிரளான மின்னல்களாக அவை இறங்கும் காட்சி உருவாகியுள்ளது என நாசா விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தொடர்ச்சியாக விழுந்த இந்த 4 ஒளித்திரள் ஜெட் மின்னல்களும் ஒன்றுக்கொன்று சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து விழுந்துள்ளன. வளிமண்டலத்தின் மேற் பரப்பில் உள்ளதால் மின்னலின் மேற்புறத்தில் சிவப்பு நிறமாகவும், பூமியை நோக்கி வரும் கீழ் பகுதி ரோஸ் நிறத்திலும் உள்ளது.

இது சாதாரணாமாக ஏற்படும் மின்னலாகவன்றி மிகப்பெரிய அளவுடையதாகவும் சாதாரண மின்னலை விட 50 மடங்கு அதிக சக்தியுடையதாகவும் உள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments