கெஹேலிய, உறவினர்களின் வங்கி கணக்குகள் இடைநிறுத்தம்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல மற்றும் 6 குடும்ப உறுப்பினர்களின் நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிகளை 3 மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அந்த நிலையான வைப்புக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிகளின் பெறுமதி 97 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகள் கெஹேலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகளின் கணவர் ஆகியோரின் பெயரில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளன.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles