பிரபாஸுக்கு வில்லனாகும் பிரபல தென்கொரிய நடிகர்..!

‘அனிமல்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தீப் ரெட்டி வங்கா ‘ஸ்பிரிட்’ என்ற படத்தை இயக்கவுள்ளார். பிரபாஸ் நடிப்பில் இப்படம் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறது.

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபல தென்கொரிய நடிகர் வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு திரையுலகில் பிரபலமான சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வரும் இவரது நடிப்பில், அடுத்தடுத்து உருவாகி வரும் படங்களுக்கு எல்லாம் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்த வகையில் அண்மையில் இவர் நடித்து வெளியான ‘கல்கி 2898 ஏடி’ படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு, வசூலை குவித்து கொண்டிருக்கிறது.

பாகுபலி படத்திற்கு பின் பான் இந்திய நடிகராக மாறி விட்ட பிரபாஸ் தற்போது எல்லாம் பெரிய பட்ஜெட் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். அப்படி இவர் நடித்து வெளியான ஆதி புருஷ், சலார் ஆகிய படங்கள் பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை. இதனிடையில் தான் அண்மையில் இவரது நடிப்பில் ‘கல்கி 2898 ஏடி’ படம் வெளியானது. அண்மைக்கலாமாக தோல்விகளை சந்தித்து வந்த இவருக்கு இப்படம் வசூல்ரீதியாக தரமான கம்பேக்கை கொடுத்துள்ளது.

இந்நிலையில் பிரபாஸ் அடுத்ததாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அர்ஜுன் ரெட்டி, அனிமல் ஆகிய படங்களின் வாயிலாக பிரபலமானவர் இவர். சந்தீப் ரெட்டி வங்கா படங்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நார்மலைஸ் செய்வதாக விமர்சனங்கள் எழுந்தாலும், கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான ‘அனிமல்’ படம் வசூலில் சக்கை போடு போட்டது. இதன் வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் ‘ஸ்பிரிட்’ படத்தை இயக்கவுள்ளார் சந்தீப் ரெட்டி வங்கா.

இப்படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, ‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபல தென்கொரிய நடிகர் மா டாங் சியோக் (Ma Dong-Seok) வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. கொரிய ஆக்ஷன் படங்களில் ரக்கட் பாயாக நடித்து கொண்டிருப்பவர் தான் இவர். தொடர்ச்சியாக தென்கொரிய படங்களை பார்ப்பவர்களுக்கு இவர் மிகவும் பரிட்சயம். இந்நிலையில் மா டாங் சியோக் ‘ஸ்பிரிட்’ படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உச்சக்கட்ட எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

‘நடிகையர் திலகம்’ படத்தின் வாயிலாக தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நாக் அஸ்வின் இயக்கத்தில் பான் இந்திய அளவில் கடந்த ஜுன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ‘கல்கி 2898 ஏடி’. பிரபாஸுடன் அமிதாப் பச்சன், கமல், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, தீபிகா படுகோன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே இணைந்து நடித்து வெளியாகியுள்ள இப்படம் உலக அளவில் ரூ. 900 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles