துப்பாக்கிச்சூட்டில் விவசாயி ஒருவர் படுகாயம்..!

முல்லைத்தீவு கல்விலான் பகுதியில் இன்று (24) இனந்தெரியாத குழுவினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விவசாயி ஒருவர் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது சில நபர்கள் கும்பலாக வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அங்கு பலத்த காயங்களுக்கு உள்ளான விவசாயியை அயல் விவசாயிகள் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கல்விலான் பகுதி விவசாயிகள் அமைப்பின் செயலாளரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளாரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அப்பகுதியில் மணல் கடத்தல்காரர்களுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மணல் கடத்தல்காரர்களுக்கு தொடர்பு உள்ளதா! என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் யார் என்பது இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles