விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கக் கோரி வைகோ மனு..!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும். இதுதொடர்பாக இந்திய மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை இரத்து செய்யக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து அந்த அமைப்புக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து இந்திய மத்திய அரசு கடந்த மே 14ஆம் திகதி அரசாணை பிறப்பித்திருந்தது.

இதற்காக அமைக்கப்பட்ட டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மீத் ப்ரீத்தம் சிங் அரோரா தலைமையிலான தீர்ப்பாயம், தடை செய்வது குறித்து ஜூலை 23ஆம் திகதிக்குள் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை நீக்கவேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை இரத்துச்செய்யக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் 07ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles