அந்த தவறை மட்டும் தனுஷ் செய்யவில்லை : ராயன் வெற்றிக்கு முக்கிய காரணமே இதுதானாம்..!

தனுஷின் நடிப்பில் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ராயன். படத்திற்கு பாசிட்டிவான டாக் இருந்து வரும் நிலையில் படத்திற்கு நல்ல வசூலும் இருந்து வருகின்றது. இதையடுத்து ராயன் படத்தின் வெற்றிக்கு என்ன காரணம் என்பதை பற்றி ரசிகர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

தனுஷின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ராயன். இப்படத்தை தனுஷே இயக்கியும் இருக்கின்றார். தனுஷ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடகர், இயக்குனர் என பல முகம் கொண்டவராக இருந்து வருகின்றார். எதிர் நீச்சல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த தனுஷ் பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

தனுஷ் இயக்குனராக அறிமுகமாகிறார் என்ற செய்தி வெளியானதுடன் அவர் கண்டிப்பாக பெரிய ஹீரோவை வைத்து ஒரு மாஸான கமர்ஷியல் படத்தை தான் எடுப்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ராஜ்கிரணை கதையின் நாயகனாக வைத்து பா.பாண்டி என்ற ஒரு பீல் குட் படத்தை இயக்கினார் தனுஷ்.

2017 ஆம் ஆண்டு வெளியான அப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ராயன் படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கியுள்ளார் தனுஷ். முதல் படத்தை பீல் குட் படமாக கொடுத்த தனுஷ் ராயன் படத்தை அதிரடியான ஆக்ஷன் படமாக உருவாக்கியுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்று வெளியான இப்படம் ரசிகர்களிடையே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

என்னதான் ராயன் ஏற்கனவே பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் அதனை தனுஷ் சொல்லிய விதம் சிறப்பாக இருந்ததாக படம் பார்த்தவர்கள் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலும் இப்படத்தில் நடித்த எஸ்.ஜெ சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன் என அனைவருக்கும் மிக முக்கியமான ரோல் கொடுத்திருந்தார் தனுஷ்.

குறிப்பாக சந்தீப் கிஷனின் ரோல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ராயன் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் ஒரே கருத்தை தான் முன் வைக்கின்றனர். என்னதான் ராயன் படம் தங்கை சென்டிமென்ட் படமாக இருந்தாலும் அதை தனுஷ் கையாண்ட விதம் தான் படத்தின் வெற்றிக்கு காரணமாக உள்ளது என படம் பார்த்த ரசிகர்கள் கூறுகின்றனர்.

தமிழ் சினிமாவில் பல தங்கை சென்டிமென்ட் படம் வந்துள்ளது. ஆனால் வழக்கம் போல இல்லாமல் ராயன் படத்தில் தங்கை சென்டிமென்டை எதார்த்தமாக சினிமா தன்மை இல்லாமல் தனுஷ் எடுத்த விதம் தான் படத்திற்கு பலமாக அமைந்திருப்பதாக ரசிகர்கள் சொல்கின்றனர்.

இந்நிலையில் தனுஷ் நடித்து இயக்கியிருக்கும் ராயன் திரைப்படம் முதல் நாளில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இப்படம் வெளியான முதல் நாளான நேற்று மட்டும் 15 கோடி வரை வசூலித்துள்ளது. படத்திற்கு பாசிட்டிவான டாக் இருந்து வருவதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles