வத்தளையில் திடீர் தீ விபத்து : ஒருவர் உயிரிழப்பு..!

வத்தளை மாதாகொடையிலுள்ள மூன்று மாடி வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 90 வயதுடையரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக 119 தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸார், அங்கு வசிக்கும் மக்களின் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

உயிரிழந்தவரின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரத்தினபுரியில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles