Monday, September 23, 2024
Homeஉடற்பருமன் பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் வட கொரிய ஜனாதிபதி..!

உடற்பருமன் பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் வட கொரிய ஜனாதிபதி..!

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் உடல்பருமன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தென் கொரியாவின் உளவு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

கிம் உடல் எடை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார் என்றும், அவரது அதிகாரிகள் வெளிநாட்டில் புதிய மருந்துகளை கொண்டு வர முயற்சிக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டில் தனது உணவை மாற்றியமைத்த கிம் ஜோங் உன், உடல் எடையைக் குறைத்தார். ஆனால் தற்போது அவரது உடல் எடை மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே கிம் ஜனாதிபதி பொறுப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக உள்ளதாகவும், தனது 12 வயது மகளை நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக்க திட்டமிட்டு இப்போதே பயிற்சி அளித்து வருகிறார்.

பொது இடங்களுக்கு தன் மகளையும் உடனழைத்துச் செல்கிறார் என்றும் தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments