பஸ்ஸொன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி 8 பேர் காயம்..!

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பாமஸ்டன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த சொகுசு பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் விபத்துக்குள்ளானதில் பஸ்ஸின் சாரதி உட்பட 7 பேர் காயமடைந்து லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மழையுடன் கூடிய மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles