தொல்பொருள் தங்கத் தாமரை என்று கூறி ஒரு பூவை விற்பனை செய்யவிருந்த நபரை மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (01) கைது செய்துள்ளனர்.
மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுவிஹார பிரதேசத்தில் மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 33 வயதான மாத்தளை கவுடுபெலல்ல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
பல்வேறு அளவுகளில் 24 இதழ்களைக் கொண்ட தொல்லியல் மதிப்புடையதாகக் கூறப்படும் இந்த தங்கத் தாமரை மலரின் எடை 706 கிராமெனவும் குறித்த மலரை 5,000,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய சந்தேகநபர் முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
