ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவரெனவும் சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles