பீஹார் கோயிலில் கூட்ட நெரிசல் : 7 பேர் பலி – 35 பேர் படுகாயம்..!

பீஹாரில் சித்தேஷ்வர்நாத் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 7இற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் 35இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமான நிலையிலுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

பீஹார் மாநிலம், ஜெகனாபாத்திலுள்ள சித்தேஷ்வர்நாத் கோயிலில், இன்று (12) இடம்பெறும் திருவிழாவுக்காக நேற்று (11) நள்ளிரவு முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர்.

விடிய விடிய கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில், அதிகாலை சூரிய உதயமாகும் வேளையில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது பக்தர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் வீழ்ந்ததில், 7 பேர் உயிரிழந்தனர். 35 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles