Wednesday, September 25, 2024
Homeகனடா அழகிப் போட்டியில் பட்டம் வென்ற கேரள பெண்..!

கனடா அழகிப் போட்டியில் பட்டம் வென்ற கேரள பெண்..!

கனடா நாட்டின் மிஸஸ் கனடா எர்த் அழகிப் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த பெண் பட்டம் வென்றுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிஸஸ் கனடா எர்த் 2024 ஆம் ஆண்டுக்கான அழகிப்போட்டியின் இறுதிக்கட்டம் கடந்த மாத இறுதியில் நடைபெற்றது.

‘இளைய தலைமுறைக்கான ஆரோக்கியம் நிறைந்த உடல் மற்றும் மன நலன் மிக்க வாழ்க்கைக்கு யோகாவின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் இந்த வருட அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த மிலி என்ற பெண் கலந்துகொண்டு முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த பட்டதை வெல்லும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் மிலி பெற்றுள்ளார். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கனடா மலையாளி பெண்களின் அழகிப் போட்டியிலும் இவர் முதலிடம் பெற்றிருந்தார். அடுத்ததாகச் சர்வதேச அழகிப் போட்டியிலும் மிலி பங்கேற்க உள்ளார்.

பொறியாளரான மிலி தனது கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கனடாவில் வசித்து வருகிறார். 52 போட்டியாளர்களுடன் இந்த அழகிப் போட்டியில் கலந்துகொண்ட மிலி, இளைஞர்களின் தற்கொலை எண்ணங்களை மட்டுப்படுத்த யோகாவின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments