Friday, September 27, 2024
Homeபொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் கும்பல் : அவதானம் மக்களே..!

பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் கும்பல் : அவதானம் மக்களே..!

பேஸ்புக் ஆதரவுக் குழுக்களாக தம்மை அடையாளப்படுத்தி, நபர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகல தெரிவித்தார்.

நேற்று (12) மட்டும் இது தொடர்பான 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

பேஸ்புக் ஆதரவுக் குழுக்களாகக் தம்மை காட்டிக்கொண்டு வட்ஸ்எப் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்புவதன் மூலம் இந்த மோசடி மேற்கொள்ளப்படுவதாக சாருக தமுனுகல குறிப்பிட்டுள்ளார்.

“உங்கள் பேஸ்புக் கணக்கு அல்லது பக்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக ஃபேஸ்புக் ஆதரவு குழுவிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி வரலாம். அதை திரும்பப் பெற, உங்கள் தகவலை சிறிது பணத்துடன் அனுப்ப வேண்டும்… இவ்வாறு மோசடிகள் நடைபெறுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதன் காரணமாக, உங்கள் Facebook பக்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டாலோ அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டாலோ, Facebook பயனர்கள் WhatsApp மூலம் வரும் எந்த செய்திகளுக்கும் பதிலளிக்கவோ அல்லது உங்கள் தகவலை தற்காலிகமாக வெளியிடவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது உங்கள் மதிப்புமிக்க தனிப்பட்ட தகவல் மற்றும் உங்கள் Facebook கணக்கு தொடர்பான கடவுச்சொல் உட்பட முக்கியமான தகவல்களை வழங்குவதன் மூலம் உங்கள் Facebook கணக்கிற்கான அணுகலை வெளி தரப்பினர் அனுமதிக்கும். இதன் விளைவாக, பயனர்கள் இதுபோன்ற செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”

வர்த்தக பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களை இலக்கு வைத்து இந்த மோசடி இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகல மேலும் தெரிவித்தார்.

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments