Sunday, September 22, 2024
Homeவெறிநாய்க்கடியால் 11 பேர் உயிரிழப்பு..!

வெறிநாய்க்கடியால் 11 பேர் உயிரிழப்பு..!

வெறிநாய்க்கடி நோய் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது.

வெறிநாய்க்கடி நோய் தொடர்பில் மக்களுக்கு தெளிவின்மை காரணமாகவே இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஹைட்ரோஃபோபியா பற்றிய மக்கள் அறியாமையால் மரணங்கள் பதிவாகுவதாகவும் அதன் சமூக சுகாதார நிபுணர் டாக்டர் அதுல லியனபத்திரன தெரிவித்தார்.

வெறிநாய்க்கடிப்பதால் ரேபிஸ் என்ற வைரஸ் உருவாகும் இந்த வைரஸ் உடலில் நுழைந்து அதன் அறிகுறிகளைக் காட்ட மூன்று வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் வரை ஆகும் எனவே நாய் கடிக்கும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு சமூகமளித்து சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை வெறிநாய்க்கடி நோய் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகம் என அவர் தெரிவிக்கின்றார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments