Sunday, September 22, 2024
HomeIMFஇன் தற்போதைய கொள்கைகளை மாற்றினால் நாடு கடும் பாதிப்புகளை எதிர்கொள்ளும்..!

IMFஇன் தற்போதைய கொள்கைகளை மாற்றினால் நாடு கடும் பாதிப்புகளை எதிர்கொள்ளும்..!

நாட்டின் தற்போதைய கொள்கைகளை கைவிட்டால் இலங்கை கடும் பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் என மத்திய வங்கியின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். .

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் மாற்றங்களை செய்வோம் என இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முக்கிய அரசியல்வாதிகள் சூளுரைத்துவரும் நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முனனெடுத்துள் பொருளாதார கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை ஒரளவிற்கு ஸ்திரப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பிரதான எதிர்கட்சியின் தலைவர் சஜித்பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்கவும் அவரது கொள்கைகளை விமர்சித்து வருவதுடன் குறித்த இருவரும் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் மாற்றங்களை மேற்கொள்ளப்போவதாகவும கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால தற்போதைய கொள்கைகளை மாற்றியமைக்க நினைத்தால், அது சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திலிருந்து விலகுவதற்கு வழிவகுக்கும் என மத்திய வங்கியின் உதவி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும், முழு உலகமும் எங்களை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் முழு உலகமும் எங்கள் மீது நம்பிக்கை வைக்க சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தை அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போதிருக்கும் கொள்கை திட்டத்தில் சிறிய மாற்றங்களை செய்யலாம் எனவும் நிதிக்கொள்கைகள் தொடர்பான நிலைப்பாட்டில், மாற்றங்களை மேற்க்கொள்வதன் மூலம் பாரியளவில் பாதையை மாற்றினால் அது இலங்கையை கடுமையாக பாதிக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments