Saturday, September 21, 2024
Homeஅமொிக்க அதிபா் தோ்தல்: மருத்துவ கடன் தள்ளுபடி, இனி வீடு கட்டுவது ரொம்ப ஈஸி -...

அமொிக்க அதிபா் தோ்தல்: மருத்துவ கடன் தள்ளுபடி, இனி வீடு கட்டுவது ரொம்ப ஈஸி – கமலா ஹாரிஸ் அதிரடி..!

அமொிக்க அதிபா் தோ்தலில் வெற்றி பெறுவதற்காக கமலா ஹாரிஸ் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையிலான பொருளாதார கொள்கைகளை தனது வாக்குறுதியாக அளித்துள்ளார். வாிச்சலுகைகள் பலவற்றை வழங்குவதாக அவா் கூறி உள்ளார்.

அமொிக்காவில் புதிய அதிபரை தோ்வு செய்வதற்கான தோ்தல் வருகிற நவம்பா் மாதம் நடக்க உள்ளது. இந்த தோ்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அமொிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டி போடுகிறார். இருவருக்கும் இடையே பிரச்சாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. பிரச்சார மேடைகளில் கமலா ஹாரிஸும், டிரம்பும் ஒருவரை ஒருவர் கடுமையாக சாடி வருகின்றனா். அண்மையில் வெளியான கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்று இருப்பது தொியவந்தது.

இதனால் டிரம்பும் தனது பிரச்சார யுக்திகளை மாற்றி வருகிறார். எனினும் அமொிக்க அதிபா் தோ்தலில் டிரம்பிற்கு வெற்றி வாய்ப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதாக சில அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் கமலா ஹாரிஸ் தோ்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். அதன்படி உணவு பொருட்கள் விலை, வாி, வீடு மற்றும் மருத்துவ செலவுகளை நடுத்தர குடும்பங்களுக்கு ஏதுவாக மாற்ற புதிய பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்த உள்ளதாக கூறினார்.

மேலும் கூறுகையில், அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் உள்ள பொிய உணவு நிறுவனங்களுக்குள் நடைபெறும் இணைப்பு ஒப்பந்தங்கள் ஒழுங்குபடுத்தப்படும். 4 ஆண்டுகளில் 30 லட்சம் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டி கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். முதல் முறை வீடு வாங்குபவா்களுக்கு, வீடுகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு வாிச்சலுகை வழங்கப்படும். மேலும் முதல் முறை வீடுகளை வாங்கும் பயனாளா்களுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் 25 ஆயிரம் டாலா் ஒதுக்கப்படும். மக்கள் அதிகம் பயன்படுத்தும் அன்றாட மருந்து பொருட்களின் விலை 40 முதல் 60 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தகுதி பெறும் 3 மில்லியன் அமொிக்கா்களின் 7 பில்லியன் மருத்துவ கடனை தள்ளுபடி செய்வதாக கமலா ஹாரிஸ் வாக்குறுதி அளித்துள்ளார். புதிதாக குழந்தை பெற்றெடுக்கும் பெற்றோருக்கு 6 ஆயிரம் டாலர் வாி கடன் வழங்க உள்தளாக அவா் தொிவித்தார். இதேபோல் நடுத்தர வா்த்கத்தினருக்கு வாிச்சலுகைகள் வழங்க உள்ளதாகவும் கமலா ஹாரிஸ் தனது வாக்குறுதிகளில் கூறி உள்ளார். ஏற்கனவே கமலா ஹாரிஸின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அரசியல் நிபுணா்கள் கூறுகின்றனா்.

இதற்கிடையே கமலா ஹாரிஸின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என டிரம்ப் விமா்சித்துள்ளார். இதுகுறித்து அவா் கூறுகையில், “அமொிக்காவின் பொிய பொய்களில் கமலா ஹாரிஸ் கூறிய வாக்குறுதிகளும் ஒன்றாகும். தற்போது அமொிக்க ஆட்சியில் கமலா ஹாரிஸும் உள்ளார். ஆனால் 3 ஆண்டுகளில் செய்யாததையா மீண்டும் ஆட்சிக்கு வந்து செய்திட போகிறார்” என கேள்வி எழுப்பி உள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments