Tuesday, September 24, 2024
Homeவிண்வெளியில் மணிக்கு 1 மில்லயன் மைல் வேகத்தில் நகரும் மர்மப் பொருள் : குழப்பத்தில் விஞ்ஞானிகள்..!

விண்வெளியில் மணிக்கு 1 மில்லயன் மைல் வேகத்தில் நகரும் மர்மப் பொருள் : குழப்பத்தில் விஞ்ஞானிகள்..!

ஆகாயத்தில் நிறைந்துள்ள அதிசயங்கள் பெரும்பாலானவை இன்னும் கண்டறியப் படாமலேயே இருந்து வருகிறது. காலங்காலமாக மனிதர்கள் விண்வெளியின் ரகசியங்களை அறிந்து கொள்வதில் தீரா வேட்கையுடன் செயலாற்றி வருகின்றனர். அறிவியல் வளர்ச்சி அந்த தேடுதலுக்கு பேருதவியாக அமைந்துள்ளது.

அந்த வகையில் உலகின் மிக மேம்பட்ட அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தற்போது விண்வெளியில் ஒரு மணிநேரத்துக்குச் சராசரியாக1 மில்லயன் மைல் [16,09,344 kmph] வேகத்தில் நகரும் மர்மப் பொருள் ஒன்றை கண்டறிந்துள்ளது. பால் வெளியை வீட்டு இந்த பொருளானது 1 மில்லயன் மைல் வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது.

பிளான்ட் 9 என்று திட்டத்தின்கீழ் நடந்த ஆய்வில் இந்த பொருளானது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மர்மப் பொருளுக்கு CWISE J1249 என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர். ஆகாயத்தை இன்பிராரெட் ஒளியின் வழியாக ஆராய்ந்த இந்த மர்ம பொருள் விஞ்ஞானிகள் கவனத்துக்கு வந்துள்ளது.

இதை விண்களாகவோ நட்சத்திரமாகவோ உறுதியாக வகைப்படுத்த முடியவில்லை. இந்த பொருளின் மையத்தில் ஹட்ரஜன் காணப்படவில்லை. எனவே இதை வாயு நிறைந்த ராட்சத கிரகம் மற்றும் குறைந்த நிறை கொண்ட நட்சத்திரம் ஆகிய இரண்டு வரையறைக்கு இடைப்பட்ட பொருளாக வகைப்படுத்த முடியும் என்பர் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments