Tuesday, September 24, 2024
Homeசிறுவர்களிடையே அதிகரித்துவரும் இன்புளுவென்சா வைரஸ்..!

சிறுவர்களிடையே அதிகரித்துவரும் இன்புளுவென்சா வைரஸ்..!

இந்த நாட்களில் சிறுவர்களுக்கு சுவாச பிரச்சினை அதிகரித்துள்ளதாகவும் இன்புளுவென்சா வைரஸ் அதிகரிப்பும் பதிவாகியுள்ளதாகவும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் என்ற பிரச்சினை குழந்தை பருவ ஆஸ்துமா காரணமாக ஏற்படலாம். இரண்டாவதாக, வைரஸ் காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. குறிப்பாக மேல் சுவாசக்குழாய்களில் வைரஸ் காய்ச்சல் பரவுகின்றது. இருமல், சளி இருந்தால், அந்த குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருங்கள். இருமலுடன் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால், மேல் சுவாசக் குழாயில் வைரஸ் உள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும். குளிர் காலத்தில் வைரஸ்ஸின் தாக்கம் அதிகரிப்பதால் சிறுவர்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments